மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி
கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலியானார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கல்லூரி மாணவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைபுதூரைச் சேர்ந்தவர் ராமர் (வயது 55). இவரது மகள் ராஜேஸ்வரி (21). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுநிலை தகவல் தொழில்நுட்ப படிப்பை பயின்று வந்தார்.
நேற்று மாலை வானில் மேகங்கள் திரண்டு இருந்ததால், வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து வர ராஜேஸ்வரி சென்றார்.
மின்னல் தாக்கி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் தெரிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சென்று மாணவி ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.