மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியில் நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக சென்ற மினிலாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அதில் இருந்த 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசியை கடத்தியதாக ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாராஜா, சிவா ஆகியோரை கைது செய்தனர்.