இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-08-20 19:32 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது, இவருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. சுரேஷ், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

இதையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுரேஷிடம் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்