விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளை தேடினர்.
அப்போது களக்காடு சிங்கிகுளத்தை சேர்ந்த மணி மனைவி சரண்யா (வயது 23), கோவில்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுப்பிரமணியன் (24), அம்பை பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகூர்கனி மகன் சம்சுதீன் (33), ஆம்பூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ஜான் மகன் கிஷோர் (20) ஆகிய 4 பேரை தனித்தனியாக பல்வேறு பகுதிகளில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.