பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

மகளின் திருமணத்திற்கு சென்றபோது பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-08-20 18:52 GMT
கந்தர்வகோட்டை,
திருமணம்
கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 
இந்தநிலையில் தனது மகளின் திருமணத்திற்காக ராஜேந்திரன் நேற்று முன்தினம் தனது குடும்பத்தோடு கீரனூருக்கு சென்று விட்டார்.
12 பவுன் நகை திருட்டு
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜேந்திரன்  கந்தர்வகோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்