அ.தி.மு.க. கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் தூக்கி சென்றதால் பரபரப்பு
தாராபுரம் அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் பெயர்த்து தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் பெயர்த்து தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடிக்கம்பம்
தாராபுரம் அருகே நஞ்சையம்பாளையம் ஆதிதிராவிட காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது இடத்தில் அ.தி.மு.க. கொடி கம்பம் நட்டு கடந்த 15ஆண்டுகாலமாக கொடியேற்றப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் இந்த கொடி கம்பத்தில் அ.தி.மு.க.வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டி வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மதியம் அ.தி.மு.க. கொடி கம்பத்தை காணவில்லை. மர்ம ஆசாமிகள் கொடி கம்பத்தை பெயர்த்து எடுத்து சென்று விட்டதாக அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கொடிகம்பத்தை அதே இடத்தில் நடவேண்டும் என போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.பிறகு தாராபுரம் துணை சூப்பிரண்டு தனராசு அப்பகுதி மக்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் இரண்டு மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.