வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு.

Update: 2021-08-20 18:05 GMT
ஊட்டி,

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஆசகன்தொரை பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.05 லட்சம் மதிப்பில் 30 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பணி, 

பாரதி நகர் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.58 லட்சம் செலவில் 25 வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட குளித்சோலையில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் போடப்பட்ட சாலை, காடு ஊராட்சிக்கு உட்பட்ட தாவணெ முதல் ஹாலட்டி வரை மேம்படுத்தப்பட்ட சாலை, 

தொட்டபெட்டா ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சாலையை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்