போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குறுக்கு வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை

திருப்பூர் குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குறுக்கு வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2021-08-20 18:01 GMT
திருப்பூர்
திருப்பூர் குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குறுக்கு வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 
போக்குவரத்து நெரிசல் 
திருப்பூர் தொழில் நகரம் என்பதால் திரும்பும் திசையெங்கும் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இதுபோல் பின்னலாடைகள் ஜாப் ஒர்க் செய்ய ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்படும். 
மேலும், தொழில் தொடர்பாக வாகனங்களில் பலரும் சென்று கொண்டிருப்பார்கள். இதனால் மற்ற மாவட்டங்களை விட திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் திருப்பூரில் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு செல்கிறவர்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். 
வீதிகள் மூடல் 
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக குமரன் ரோடு, பார்க் ரோடு, தாராபுரம் ரோடு, அவினாசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
இதன் ஒரு பகுதியாக குமரன் ரோட்டிற்கு பார்க் ரோட்டில் இருந்து சபரி வீதி உள்ளிட்ட வீதிகளில் இருந்து வருகிற வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், அதனை தவிர்க்கும் வகையில் சபரி வீதி உள்ளிட்ட சில குறுக்கு வீதிகள் இரும்பு தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்