சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டையில் உள்ள செம்பொர் ஜோதீஸ்வரன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் முன்பு அமைந்துள்ள நந்திக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களல் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நஞ்சை புகளூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தோகைமலை ஒன்றியம், ஆர்டிமலை மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், விபூதி, குங்குமம், தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதேபோல் கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.