108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
நிறைமாத கர்ப்பிணி
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32), கூலி தொழிலாளி. இவரது மனைவி நிர்மலாதேவி (25). இவர்களுக்கு ஏற்கனவே முதல் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிர்மலாதேவி 2-வதாக கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில நிமிடங்களில் நிர்மலாதேவி வீட்டிற்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வேகமாக வந்தனர்.
பெண் குழந்தை
இதற்கிடையில் அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஆம்புலன்சை வடுகபாளையம் பிரிவு ஆம்புலன்சை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, அவசர கால மருத்துவ நுட்பனர் திருமலைசாமி, பைலட் வேல்முருகன் ஆகியோர் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர்.
இதில் நிர்மலா தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயுக்கும், குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரையும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு நிர்மலாதேவி மற்றும் அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.