சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-20 17:40 GMT
க.பரமத்தி
சின்னதாராபுரம் செல்வ நகரை சேர்ந்தவர் விஜய். இவருடைய மகள் ஜூலி ஜோஸ்பின் மேரி (வயது 17). இவர் சின்னதாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை விஜய் இறந்து விட்டதால் தனது தாய் அற்புதமேரியுடன் ஜூலி ஜோஸ்பின் மேரி வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஜூலி ஜோஸ்பின் மேரி வேலைக்கு செல்லவில்லை. இவரது தாய் அற்புதமேரி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது ஜூலி ஜோஸ்பின் மேரி சேலை மூலம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்