யானையால் போக்குவரத்து பாதிப்பு

நடுரோட்டில் நின்ற யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-20 17:32 GMT
அந்தியூர்-மைசூரு ரோடு வனப்பகுதியில் செல்கிறது. உணவு, தண்ணீரை தேடி யானைகள் இந்த ரோட்டை கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 9 மணி அளவில் யானை ஒன்று அந்தியூர்-மைசூரு ரோட்டில் உள்ள பர்கூர் சுண்டப்பூர் பிரிவில் வந்து நின்றது. இதனால் அந்த வழியாக பஸ், கார், லாரி  என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 45 நிமிடத்துக்கு பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. 

மேலும் செய்திகள்