தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்ற 12 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற தர்மபுரி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.