பெண் தற்கொலை

திண்டுக்கல்லில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-20 16:21 GMT
திண்டுக்கல் :

திண்டுக்கல் லைன் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். நாட்டாண்மை. இவருடைய மனைவி செலின் மேரி (வயது 51). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செலின்மேரி நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 


இதுகுறித்து திண்டுக்கல் டவுன் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்