கோவை
தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பின்படி கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 840 ஆக அதிகரித்தது.
நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 234 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 340 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 50 வயது பெண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 234 ஆக உயர்ந்தது. தற்போது 2,266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், 3-ம் அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.