நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-20 16:01 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கேதையறும்பு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (43), ஓடைப்பட்டியை சேர்ந்த ராஜூ (45), தும்மிச்சம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (47) ஆகியோர் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக என்னிடம் கூறினர். அதை நம்பி நிலம் வாங்குவதற்காக ரூ.10 லட்சம் கொடுத்தேன். ஆனால் நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.


இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லட்சுமணன் நேற்று கைது செய்யப்பட்டார். மீதமுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்