டிரைவர் சாவு

வேடசந்தூர் அருகே கார்-ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார்.

Update: 2021-08-20 15:45 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று 4 பேரை ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் அருகே கோட்டையூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். 

ஆட்டோ கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே சென்றபோது பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார்-ஆட்டோ மீது மோதியது. இதில்  ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியதில் நந்தகோபால் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நந்தகோபால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நந்தகோபாலுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.  

மேலும் செய்திகள்