ஓடும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்
ஓடும் ெரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ெரயில்வே குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
காட்பாடி
ஓடும் ெரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ெரயில்வே குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ெரயிலில் சோதனை
ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக ரெயிலில் கஞ்சா, ரேஷன் அரிசி, வெள்ளி பொருட்களை கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரெயில்வே குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த ரெயிலில் பயணிகள் இருக்கைகளின் கீழே கேட்பாரற்ற 2 பெரிய பைகள் கிடந்தன. அதில் கஞ்சா பொட்டலங்கள் பார்சல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
18 கிலோ கஞ்சா பறிமுதல்
அதில் மொத்தம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசார் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் வேலூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தவர்கள் யார்? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.