செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 98 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 98 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-08-20 13:03 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 169-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 625 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர். 1123 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 421 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1221 -ஆக உயர்ந்துள்ளது. 360 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்