கொரோனாவால் உயிரிழப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.
அரியலூர்:
உயிரிழப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 71 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 209 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,239 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,083 பேருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 710 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2,035 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.