சென்னையில் ஒரு சில இடங்களில் மழை
சென்னையில் ஒரு சில இடங்களில் இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.