ஆசிரியையிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டையில் ஆசிரியையிடம் மர்ம நபர்கள் நகை பறித்துச் சென்றனர்.

Update: 2021-08-19 19:24 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. சி காலனியை சேர்ந்தவர் ஜெகதாம்பிகை (வயது 48). பள்ளிக்கூட ஆசிரியையான இவர் நேற்று மாலை பள்ளிக்கூடத்தில் இருந்து பணியை முடித்து விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர்.

அவர்கள் திடீரென்று ஜெகதாம்பிகை கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெகதாம்பிகை பாளையங்கோட்டை பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்