ஒண்டிவீரன் நினைவிடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை-1200 போலீசார் பாதுகாப்பு
ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெற்கட்டுசெவல் பச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
தென்காசி:
ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெற்கட்டுசெவல் பச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் ெதரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒண்டிவீரன் நினைவு தினம்
விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பச்சேரியில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1,200 போலீசார் பாதுகாப்பு
இதேபோன்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், இன்று ஒண்டிவீரன் நினைவு தினத்தில் தென்காசி மாவட்டம் மற்றும் வெளிமாவட்ட பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறி கலந்து கொள்ளும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, நெற்கட்டும்செவல் பச்சேரியில் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் ஆய்வு செய்தார்.