கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2021-08-19 18:32 GMT
கரூர்,
காதல் ஜோடி
கரூர் மாவட்டம் சனபிரட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 22). ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியதர்ஷினி (20). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பிரியதர்ஷினி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மாயனூரில் உள்ள ஒரு கோவிலில் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
இதையடுத்து, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். 
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரியதர்ஷினி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம். எனவே எனது பெற்றோரிடமிருந்து எனது கணவரையும், என்னையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்