கீரனூரில் உபகார மாதா ஆலய தேர்பவனி திரளானவர்கள் கலந்து கொண்டனர்
உபகார மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.
கீரனூர்:
கீரனூர் பஸ் நிலையம் அருகே புஷ்ப நகரில் உபகார மாதா ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளால் ஆன ரதத்தில் மாதா சிலையை வைத்தனர். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.