சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதல்: மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி பலி
சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி பலியானார்.
நொய்யல்,
நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
கரூர் மாவட்டம் நடையனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 67). இவர் அப்பகுதியில் தனியார் பள்ளியை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கொட்டையூரில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு தங்கதுரை சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல்-வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
தனியார் பள்ளி நிர்வாகி பலி
இதில் நிலைத்தடுமாறிய தங்கதுரை மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.