வீடு புகுந்து நகை லேப்டாப் திருட்டு
வீடு புகுந்து நகை லேப்டாப் திருடப்பட்டது.;
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளம் விலக்கு சந்தோஷ்நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் சகாயராஜ் (வயது 30).இவர் சம்பவத்தன்று அவரது வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.பின்னர் அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் தங்க செயின் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட சில பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.இந்த நிலையில் வீடு திரும்பிய கிறிஸ்டோபர் சகாயராஜ் திருட்டு நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு இதுதொடர்பாக திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.