திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

சம்பளம் வழங்கக்கோரி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2021-08-19 17:34 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான ஊதியம் நேற்று வரை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்