கஞ்சா விற்க வந்தவர் உள்பட 2 பேர் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா விற்க வந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-08-19 17:27 GMT
ஜோலார்பேட்டை

விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா விற்க வந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை போலீசார் இன்று இரவு தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பியோடினர். போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர். இருவரும் ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்க வந்ததாக கூறினர்.

இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

கைதானவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரசாது (வயது 27), திருப்பத்தூர் அருகில் உள்ள பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற ஸ்டீபன் ராஜ் (32) எனத் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்