செஞ்சியில் வக்கீல்கள் போராட்டம்

சுடுகாட்டில் குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தொிவித்து செஞ்சியில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-08-19 17:27 GMT
செஞ்சி, 

செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், சங்கராபரணி ஆற்றின் அருகே உள்ள சுடுகாட்டில் கொட்டி தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் சக்தி ராஜன் தலைமையில் வக்கீல்கள் கலியமூர்த்தி  பாஸ்கரய்யா, சீனிவாசன் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் ராமு உள்ளிட்டோர் நேற்று செஞ்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி தாசில்தார் ராஜன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் ராஜன், இனி சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கப்படாது என்று உறுதி அளித்தார். இதையடுத்து வக்கீல்கள் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரியிடமும் வக்கீல்கள் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்