அங்காளம்மன் கோவிலில் 3 நாட்கள் நடை அடைப்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 3 நாட்கள் நடை அடைக்கப்படுகிறது.
மேல்மலையனூர்,
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் கூட்டம் கூடுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிலும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்றும், அதே சமயத்தில் ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு தெரிவித்துள்ளார்.