விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு

ஏலகிரி மலையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-08-19 16:47 GMT
ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிகிராமம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 50), விவசாயி. 

இவருக்கு சொந்தமான நிலம் ஏலகிரிமலை அருகில் மேட்டுகனியூர் பகுதியில் உள்ளது. 

சம்பவத்தன்று இவர் தனது நிலத்தை பார்க்கச் சென்றார். அப்போது மேட்டுகனியூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள், கோபால், பெருமாளின் மனைவி மாரி, மங்களம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜி, ராமலிங்கம் ஆகிய 5 பேரும் சேர்ந்து குமரேசனின் நிலத்தின் இருந்த முள்வேலியை சேதப்படுத்தி உள்ளே நுழைந்து மரம், செடிகளை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களின் செயலை குமரேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் உள்பட 5 பேரும் சேர்ந்து குமரேசனை தகாத வார்த்தைகளால் ேபசி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். 

இதனால் குமரேசன் ஏலகிரி மலை போலீசில் புகார் செய்தார். போலீசார், பெருமாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்