55 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு
கோவில் நிலத்தில் வீடு கட்டி வசிக்கும் 55 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
அரக்கோணம்
கோவில் நிலத்தில் வீடு கட்டி வசிக்கும் 55 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கிராமத்தில் அழகுராஜா பெருமாள் கோவில் நிலத்தை 55 குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.
அந்த 55 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தக்கோலம் கிராமத்தில் அதற்கான இடத்தை தோ்வு செய்ய ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், தக்கோலம் கிராம நிர்வாக அலுவலர் வினோத் சந்தர், தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.