மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியானாா்

Update: 2021-08-19 16:09 GMT
கிருஷ்ணகிரிூ
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் லூயிஸ் (வயது 79). முன்னாள் ராணுவ வீரர். சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி பக்கமுள்ள தனியார் ஓட்டல் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜான் லூயிஸ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----

மேலும் செய்திகள்