தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 10 பேர் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 10 பேர் மீட்கப்பட்டனர்

Update: 2021-08-19 13:49 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புள்ளியியல் அலுவலர் சுடலைமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட தருவைகுளம், வேப்பலோடை, கீழமுடிமண், ஓட்டப்பிடாரம், வீரபாண்டியாபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
அப்போது வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில், 10 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களை ஆசிரியர் பயிற்றுனர்கள் மீட்டனர். இதில் 5 பேர் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டனர். கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்