திருச்செந்தூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
திருச்செந்தூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 58). விவசாயி. இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நடேசனுக்கு மதுகுடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 1-ந் தேதி நடேசன் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். அப்போது மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் வீட்டின் அருகே வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நடேசன் இறந்து விட்டார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.