அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அன்னங்கால் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 54). இவர் தனது மனைவி மல்லிகாவுடன் (50) மோட்டார் சைக்கிளில் கடந்த 14-ந் தேதி மதுராந்தகம் சென்று கொண்டிருந்தார்.
அவர்களின் பின்னால் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா எடையாம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசனும் (25), அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேலுவும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அச்சரப்பாக்கம் அருகே சென்றபோது ஜெயராமன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் சென்ற தமிழரசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஜெயராமன், மல்லிகா, தமிழரசன், சக்திவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழிலேயே ஜெயராமன் (54) உயிரிழந்தார். காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் தமிழரன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தமிழரசன் (25) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மல்லிகாவும், சக்திவேலும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.