திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா கணவருடன் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரஜினிகாந்த்தின் கமள் சவுந்தர்யா கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-08-19 12:05 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் வந்தார்.
கோவிலில் காலை 10 மணிக்கு நடந்த உச்சிகால அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டனர்.
பின்னர் கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் வழங்கி, யானையிடம் ஆசி பெற்றனர். இதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்