கும்மிடிப்பூண்டி அருகே, தொழிற்சாலை ஊழியர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-19 11:54 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி அடுத்த ராமஞ்சேரிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 32). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மோகன் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்