கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி, ஆக.19-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 41 ஆயிரத்து 825 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 41 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 260 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 327 ஆக உள்ளது.
=======