குற்றவாளிகள் உருவம் கேமராவில் பதிவாகியும் அடையாளம் காண முடியாமல் தவிப்பு

ிருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் முகக்கவசம் அணிந்து வருவதால் போலீசாருக்கு புதிய தலைவலி ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-08-19 01:19 GMT
கோவை

திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் முகக்கவசம் அணிந்து வருவதால் போலீசாருக்கு புதிய தலைவலி ஏற்பட்டு உள்ளது. அவர் களின் உருவம் கேமராவில் பதிவாகியும் அடையாளம் காண முடியாத தால் போலீசார் தவித்து வருகிறார்கள்.
 
கொள்ளை சம்பவங்கள்

கோவை மாநகரில் கடந்த வாரம் சிங்காநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 37 பவுன் தங்க நகை கள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல் கடந்த 12-ந் தேதி காட்டூர் காளீஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டில் 20 பவுன் நகையுடன் மர்ம ஆசாமி தப்பிச்சென்றார். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

போலீசார் தவிப்பு 

இதில் சிங்காநல்லூரில் கொள்ளையடித்த நபரின் உருவம் கேமராவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. ஆனால் அந்த நபர் முகக்கவசம் அணிந்து இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. 

அது போன்று காட்டீரில் கொள்ளையடித்த நபரும் முகக்கவசம் அணிந்து இருந்ததால் அவரையும் அடையாளம் காண முடியவில்லை. 

கொரோனா பரவலை தடுக்க பயன்படுத்தும் முகக்கவசம், போலீசாருக்கு தற்போது புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அடையாளம் காணுவதில் சிக்கல் 

சிங்காநல்லூரில் கொள்ளையடித்த ஆசாமி, ஆட்டோவில் பெரியநாயக்கன் பாளையம் வரை சென்று, பின்னர் வேறு ஆட்டோவில் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று உள்ளார். 

அவர் முகக்கவசம் அணிந்து இருந்ததால், ஆட்டோ டிரைவர்களுக்கு கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது, அவர்கள் இருவருமே முகக்கவசம் அணிந்து இருந்ததால், அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

 இருந்தபோதிலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்