பூ மார்க்கெட்டுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்ததால் பூ மார்க்கெட்டுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை
கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்ததால் பூ மார்க்கெட்டுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கேரள வியாபாரிகள் வருகை
கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவர்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், அல்லது கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள். அல்லது எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
பூ மார்க்கெட்டில் பரிசோதனை
இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் பூக்கள் வாங்க கோவை பூ மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர். பூ மார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதைத்தொடர்ந்து கூட்டநெரிசலில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள், பூ மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அத்துடன் மாநகராட்சி ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி பரிசோதனை செய்தனர். அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.