மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 168 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல், ஆக.19-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 168 ஆக அதிகரித்து உள்ளது.
54 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 114 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 168 ஆக அதிகரித்து உள்ளது.
522 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 54 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 47 ஆயிரத்து 185 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 461 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 522 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், 3-ம் அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.