ஆடு திருடிய 3 பேர் கைது

ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-18 21:28 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் அருகே உள்ள சுங்குராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 60). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆட்டு மந்தையில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பேரையூர் அருகே சிலர் ஆடுகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பேரையூர் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பாத்தியின் ஆடுகள் என தெரியவந்தது. ஆடுகள் திருடிய மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த கணேஷ் (19), கணேஷ் பாண்டி (, 21) பேரையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (25) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் ஆடுகளை  மீட்டு விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்