சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம்,
எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் கன்னியாசிகாரன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் முருகேசன் (வயது 27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி தெருவில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முருகேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.