சேலத்தில் இரவில் பலத்த மழை

சேலத்தில் இரவில் பலத்த மழை பெய்தது.;

Update: 2021-08-18 21:00 GMT
சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, கோட்டை, குகை, பெரமனூர், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றதை காணமுடிந்தது. சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு மழை பெய்தது.
நேற்று காலை 8 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரியகோவிலில் 5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. எடப்பாடியில் 3 மி.மீ., சேலத்தில் 2 மி.மீ., ஏற்காட்டில் 1 மி.மீ. மழை பெய்திருந்தது.

மேலும் செய்திகள்