கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் காதலன் சாவு

கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் நீரில் மூழ்கி காதலன் உயிரிழந்தார்;

Update: 2021-08-18 20:14 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் காஞ்சீபுரத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும் குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகனும் பி.ஏ.பட்டதாரியுமான மோகன்ராஜ் (வயது28) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புதுச்சாவடி அருகே அரசு வனத்துறைக்கு சொந்தமான தைல மர காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. அவர்கள் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீரில் மூழ்கியதால் மோகன்ராஜை பிணமாகத் தான் மீட்க முடிந்தது. அவரது காதலி உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்