காலிக்குடங்களுடன் வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ெபண்கள்
சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் டவுன் 28-வது வார்டு காந்தி நகரில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி காலிக்குடங்களுடன் பெண்கள் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை சூழ்ந்து முற்றுகையிட்டு குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் பல மாதங்களாக குடிநீர் வருவதில்லை. லாரி மூலம் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பலமுறை புகார் அளித்தும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை, என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலிக்குடங்களுடன் வந்து பெண்கள் நகராட்சி அலுவலகத்தை சூழ்ந்து முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.