வாடகை வீட்டில் விபசாரம்; பெண் உள்பட 2 பேர் கைது

வாடகை வீட்டில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-18 19:00 GMT
புதுச்சேரி, ஆக.19-
புதுச்சேரி தில்லைமேஸ்திரி வீதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுசிலா (வயது 43),  கோட்டக்குப்பம்  அருண்குமார் (30) என்பதும், இதில் சுசிலா, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டதும்  தெரிய வந்தது. இதையடுத்து சுசிலா, அருண்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்