உருட்டுக்கட்டையால் அண்ணனை அடித்துக் கொன்ற கொத்தனார் கைது

திருக்கடையூர் அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி அண்ணனை கொன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-18 17:39 GMT
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி அண்ணனை கொன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கேந்தி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்ராசு(வயது 24). டிரைவர். இவருடைய தம்பி விவேக்(20). இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அண்ணன் அடித்துக் கொலை
இதில் ஆத்திரமடைந்த விவேக், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சின்ராசுவை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சின்ராசு பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சின்ராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர். சொத்து தகராறில் அண்ணனை, தம்பியே கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்